தொழிற்சாலை தரவுத்தளம்
WRC இன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆடைத் தொழிலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களைக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் உலகெங்கிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் தரவுத்தளத்தை எங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். தரவுத்தளத்தில் தொழிற்சாலைகளின் பெயர் மற்றும் இடம், அவை உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் பிற தகவல்கள் உள்ளன. இங்கே அழுத்தி நீங்கள் தரவுத்தளத்தின் உள்நுழையலாம்.
இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்த, நீங்கள் ஆங்கிலத்தில் சில அடிப்படை வார்த்தைகளை அறிந்திருக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தேட, "SCHOOL" என்ற பட்டியலிலிருந்து அந்த பல்கலைக்கழகத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிய, "LICENSEE" என்ற பட்டியலிலிருந்து அந்த நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு நாட்டில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிய, "COUNTRY" என்ற பட்டியலிலிருந்து அந்த நாட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையைத் தேட, இந்த தொழிற்சாலையின் பெயரை FACTORY என்று எழுதும் பெட்டியில் தட்டச்சு செய்யவும்.
- மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் எவற்றைக் கலந்து பயன்படுத்தியும் நீங்கள் தேடலாம்.
நீங்கள் தகவலை உள்ளிட்டதும், பின்வரும் வழிகளில் முடிவுகளைப் பார்க்கலாம்:
- ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் பட்டியலை மட்டும் பார்க்க, GROUP BY என்பதை அழுத்தி, SCHOOL என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- குறிப்பிட்ட நாட்டிற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் பட்டியலை மட்டும் பார்க்க, GROUP BY என்பதை அழுத்தி, COUNTRY என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் பட்டியலை மட்டும் பார்க்க, GROUP BY என்பதை அழுத்தி, LICENSEE ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- தொழிற்சாலைகளின் பட்டியலைப் பார்க்க, GROUP BY என்பதை அழுத்தி, FACTORY என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது.