அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு (டபிள்யூஆர்சி) எப்படி தொடங்கியது?
1998 ஆம் ஆண்டு, பல்கலைக்கழகங்களின் இலச்சினைகளோடு ஆடைகள் தயாரிக்கப்படும் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படாமல் இருப்பதை அமெரிக்காவிலுள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிற உறுப்பினர்கள் உணர்ந்தனர். கல்லூரி சார் ஆடைகளை விற்பது அமெரிக்காவில் பெரிய வணிகமாகும். தொழிற்சாலைகளில் தொழிலாளர் உரிமை மீறல்களை அறிந்த கல்லூரி சார் வட்டத்திலும், வெளியிலும் உள்ள பலரும் கவலையடைந்தனர். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக குறிப்பிட்ட அடிப்படை தரநிலை நடத்தைகளை இந்த பல்கலைக்கழகங்கள் நடைமுறைப்படுத்தின. இந்த நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய டபிள்யூஆர்சி உருவாக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் நிலைமைகளை மேம்படுத்தும் வழிகளை ஆராய்ந்து, தொழிலாளர்களுக்கு உதவுவதே அதன் நோக்கமாகும். இந்த நடத்தை விதிகளுக்கு இணங்க, தொழிற்சாலைகளின் பணி நிலைமைகள் குறித்து விசாரணை நடத்துவது, அத்தகைய விசாரணை அறிக்கைகளை வெளியிடுவது, நடத்தை விதிகள் மீறப்பட்டிருந்தால், அந்த நிலைமைகளை மேம்படுத்தும் முறைகளை ஆராய்வது ஆகியவை டபிள்யூஆர்சி-யின் பொறுப்பாகும்.
மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள தொழிலாளர் மற்றும் மனித உரிமை இயக்கத்தின் ஆலோசனையில், அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த டபிள்யூஆர்சி உருவாக்கப்பட்டது.
டபிள்யூஆர்சி விசாரணைகள் எப்படி நடத்தப்படுகின்றன?
தொழிற்சாலைகளுக்கு வெளியே தொழிலாளர்களின் வீட்டில் அல்லது அவர்களின் சமூகத்தில் எங்காவது நேர்காணல்கள் டபிள்யூஆர்சி விசாரணைகளில் அடங்குகின்றன. தொழிற்சாலை மேலாளர்கள், அரசு, மாகாணம், அல்லது நாட்டின் தொழிலாளர் ஆய்வாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அறிஞர்கள், தொழிலாளர் வழக்கறிஞர்கள், மற்றும் கண்காணிப்புக்கு உதவக்கூடிய பிற தனிநபர்களையும் டபிள்யூஆர்சி தொடர்பு கொள்கிறது. மேலாளர்கள் அனுமதித்தால், டபிள்யூஆர்சி தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறது. இதன் மூலம் கிடைக்கும் எல்லா தரவுகளையும், நேர்காணல்களையும் டபிள்யூஆர்சி பகுப்பாய்வு செய்து, நடத்தை விதிகள் பொருந்துவதை முடிவு செய்கிறது. நடத்தை விதிமீறல்கள் இனம்காணப்பட்டால், டபிள்யூஆர்சி சீர்திருத்த செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. அமெரிக்காவில் அலுவல்பூர்வ அறிக்கை வெளியிடப்படுகிறது. சிலவேளை அந்த அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டு இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்ட சமூகத்தின் மூலம் பலருக்கும் விநியோகிக்கப்படுகிறது.
நடத்தை விதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு, சில நாட்கள் விசாரணை போதுமானது என்பதில் டபிள்யூஆர்சி நம்பிக்கை கொள்ளவில்லை. நடைமுறை காரணங்களுக்காக தொழிலாளர்கள் அல்லது அந்த தொழிற்சாலை மற்றும் தொழில்துறை குறித்து தெரிந்தவர்களால் எழுப்பப்படும் பிரச்சனைகளின் விசாரணைகளுக்கு முன்னிரிமை அளிக்கப்படுகிறது.
வட அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நடத்தை விதிகளிலுள்ள தொழிலாளர் உரிமைகள் குறித்து தொழிலாளர்களுக்கு டபிள்யூஆர்சி கல்வி பயற்சி திட்டங்களை வழங்குகிறது. நடத்தை விதிமீறல்கள் பற்றி உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் டபிள்யூஆர்சி மூலம் புகார் அளிக்கும் பொறிமுறையை உருவாக்குவதே எங்களின் நோக்கம். ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் கண்காணிப்பு நிறுவனம் இருக்க முடியாது. இதன் காரணமாக, நடத்தை விதிகள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களே தங்களின் கண்காணிப்பாளர்களாக இருக்க செய்வதாகும்.
முழுமையான புறநிலையோடு செயல்பாட டபிள்யூஆர்சி அர்பணிப்போடு உள்ளது. மேலும், டபிள்யூஆர்சி தகவல் ஆதாரமாக செயல்படவும் முயல்கிறது. இதன் மூலம் ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் வட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஆடைகளை தாயரிக்கும் தொழிற்சாலைகளின் தற்போதைய நிலைமைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
விசாரணை நடத்த தொழிற்சாலைகளை டபிள்யூஆர்சி எப்படி தேர்வு செய்கிறது?
தொழிலாளர் அல்லது அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விசாரணையின் ஒரு பகுதியிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொண்ட புகாரின் அடிப்படையில் டபிள்யூஆர்சி ஒரு தொழிற்சாலை மீது விசாரணை மேற்கொள்கிறது.
வட அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு ஆடை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளரிடம் இருந்து புகாரை டபிள்யூஆர்சி பெறுகின்றபோது, அலுவல்பூர்வ விசாரணையை தொடங்குவது குறித்து முடிவு செய்ய கீழ்காணும் அம்சங்களை கவனத்தில் கொள்கிறது: தொழிலாளர் உரிமை விதிமீறலின் தீவிரம், உள்ளூர் நிறுவனத்தின் கருத்து, புகாரின் நம்பகத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, அதாவது இந்த தொழிற்சாலை தயாரிப்பில் ஈடுபடும் டபிள்யூஆர்சி-யுடன் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை.
டபிள்யூஆர்சி சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அதிகாரபூர்வ விசாரணைகளை (அதாவது மூன்றாம் தரப்பினரால் எழுப்பப்பட வேண்டிய அவசியமற்ற விசாரணைகள்) தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தொழிற்சாலையில் கடுமையான பிரச்சனைகள் இருப்பதாக உள்ளூர் அமைப்பிடமிருந்து தகவல் வந்தால், ஒரு தொழிற்சாலை பல்கலைக்கழகங்களுக்கு நிறைய ஆடை தயாரிக்கும்போது, ஆனால் இந்த தொழிற்சாலையின் நிலைமைகள் குறித்து தெரியாத நிலை முதலியனவற்றால் இத்தகைய விசாரணைகள் நடத்தப்படும்.
சில தொழிற்சாலைகளில் டபிள்யூஆர்சி காட்டும் ஆர்வம் மற்றவற்றில் காட்டப்படுவதில்லை, ஏன்?
எல்லா தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று டபிள்யூஆர்சி விரும்புகிறது. ஆனால், பல்கலைக் கழகங்களுக்கு ஆடைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மட்டுமே, விதிமீறல் ஏற்படும்போது, மாற்றத்தையும், திருத்தத்தையும் செய்யக் கோரும் அதிகாரம் நம்மிடம் உள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைளின் நிலைமைகளை டபிள்யூஆர்சி மேம்படுத்தலாம் என்பதும், இத்தகைய தொழிற்சாலைகள் பிற தொழிற்சாலைகளுக்கு நேர்மறை எடுத்துக்காட்டாக விளங்கலாம் என்பதும் நமது நம்பிக்கை.
பல்கலைக்கழகங்களுக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பட்டியல் எங்கிருந்து வருகிறது?
டபிள்யூஆர்சி – இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் பொருட்களை தயாரிக்கின்ற எல்லா தொழிற்சாலைகளின் பட்டியலையும் அவற்றின் டீலர்கள் (பல்கலைக்கழகத்தின் பெயர் அல்லது இலட்சினையுடன் ஆடைகளை உற்பத்தி செய்ய ஒரு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள்) வழங்க வேண்டும்.
டபிள்யூஆர்சி சிக்கல்களை எதிர்கொண்டால் பிராண்டுகள் தங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்கின்றனவா?
பன்னாட்டு கம்பெனி அந்த தொழிற்சாலையில் இருந்து கொண்டு அங்குள்ள நிலைமைகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு என்பதை டபிள்யூஆர்சி எப்போதும் பரிந்துரைத்து வருகிறது. ஒரு ஒப்பந்தத்தை முறித்துவிட்டு இன்னொரு தொழிற்சாலைக்கு செல்லும் கம்பெனியின் அதனுடைய பொறுப்பை செய்யவில்லை என்று டபிள்யூஆர்சி நம்புகிறது. மெக்சிகோவிலுள்ள கூக்டொங் தொழிற்சாலை தொடர்பான செயல்பாட்டில், அந்த தொழிற்சாலையில் இருந்து நிலைமைகளை மேம்படுத்த நைக் நிறுவனத்தை டபிள்யூஆர்சி கட்டாயப்படுத்தியது. இந்த பரிந்துரையை நைக் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
டபிள்யூஆர்சி விசாரணைகளின் முடிவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகிறதா?
ஆம். எல்லா அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சில உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. புகாரை அளித்த அல்லது நேர்காணலில் பங்கேற்ற தொழிலாளர்களின் அடையாளம் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
நடத்தை விதிகள் அதிகமாக உள்ளதா? பல நடத்தை விதிகளின் கீழ் தொழிலாளர்களும் அவர்களது கூட்டாளிகளும் அவர்களின் தற்போதைய உரிமைகளை அறிந்து கொள்வது எவ்வாறு?
பல நடத்தை விதிகள் இருப்பது உண்மை. இது குழப்பத்தை உருவாக்கக்கூடும். ஆனால், நடத்தை விதிகளில் பல, ஒரு மாதிரியானவை. பெரும்பாலான விதிகள் சர்வதேச மற்றும் தேசிய சட்டத்தை, ஒரு குறிப்பாக எடுத்துக்கொள்கின்றன மற்றும் அதே தரநிலைகளுக்கான குறிப்புகளையும் உள்ளடக்குகின்றன: குறைந்தபட்ச ஊதியம், பணிநேரம், சங்கத்தின் சுதந்திரம் மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள், பாகுபாடு இல்லாமை, பெண்கள் உரிமைகள் போன்றவை. ஏதாவது தேசிய அல்லது சர்வதேச சட்டம் அல்லது ஒரு நடத்தை விதியின் குறிபிட்ட சரத்து தொடர்பாக புகாரை அளிக்கும் ஒரு தொழிலாளர், புகாரை முறையாக அளிக்க வேண்டும்.
டபிள்யூஆர்சி நிர்வாக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
டபிள்யூஆர்சி வாரிய இயக்குநர்களாக 18 பேரை கொண்டுள்ளது. இந்த கவுன்சிலில் ஆறு பல்கலைக்கழக நிர்வாகிகளின் பிரதிநிதிகள், ஆறு மாணவர் அமைப்பான குறைந்த ஊதியம், நீண்டநேர வேலை, மோசமான பணிச்சூழலுக்கு எதிரான மாணவர்கள் ஒன்றியத்தின் (யுஎஸ்எஎஸ்) பிரதிநிதிகள், மற்றும் ஆறு தொழிலாளர் உரிமை நிபுணர்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
டபிள்யூஆர்சி-யின் பணிக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது?
டபிள்யூஆர்சி-யின் சுமார் 65 சதவீத நிதி ஆதரவு பல்கலைக்கழக இணைப்பு கட்டணத்தில் இருந்தும், 25 சதவீதம் ஒன்றிய மற்றும் கொள்கை ஒதுக்கீடுகளில் இருந்தும் வருகிறது. எஞ்சியவை, டபிள்யூஆர்சி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து வருகின்றது.
டபிள்யூஆர்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உறவு என்ன?
பணி நிலைமைகளை விசாரிக்கும் அமைப்புதான் டபிள்யூஆர்சி. தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பல்ல. டபிள்யூஆர்சி ஆற்றுகின்ற பங்களிப்பு, தொழிலார்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்களின் பங்கிற்கு பதிலாக அமைந்துவிட கூடாது. தங்களுக்குரிய தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் அமைத்துகொள்ளும் உரிமை மற்றும் அவர்களின் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் உரிமைக்கு டபிள்யூஆர்சி ஆதரவு அளிக்கிறது. உண்மையான மற்றும் நீண்டகால மாற்றத்தை கொண்டுவர தொழிற்சங்கங்கள் முக்கியமானவை என்பதை டபிள்யூஆர்சி அங்கீகரிக்கிறது. பணி சூழ்நிலைகள் பற்றிய தகவல்கள் அளிப்பதில் தொழில் சங்கங்கள் முக்கியமான ஆதாரங்கள் என்றும் டபிள்யூஆர்சி நம்புகிறது. உலக அளவில் தெற்கில் உள்ள பரஸ்பர நன்மை பயக்கும் தொழிற்சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்த டபிள்யூஆர்சி வேலை செய்கிறது.