எமது பணி
டபிள்யூஆர்சி முறை
எந்தவொரு பணியிடம் பற்றிய தகவல்களை வழங்கும் சிறந்த ஆதாரம் தொழிலாளர்கள். டபிள்யூஆர்சி-யின் விசாரணை முறையின் கவனமே அவர்கள்தான். முக்கியமாக, தொழிற்சாலை நிர்வாகத்தின் அறிவு அல்லது ஈடுபாடு இல்லாமலேயே டபிள்யூஆர்சி, தொழிலாளர்களிடம் பணியிடத்துக்கு வெளியில் நேர்காணல் நடத்துகிறது. இதனால் தொழிலாளர்கள் வெளிப்படையாகவும் பழிவாங்கப்படும் பயமின்றியும் பேச முடியும். சிறிதளவு அல்லது நேர்மையான தகவல்களைப் பெறுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பிராண்டுகள் அவர்களின் ஒப்பந்த விநியோகஸ்தர்களை ஆய்வுசெய்யும்போது, தொழிற்சாலைக்குள் இருக்கும் தொழிலாளர்களிடம் டபிள்யூஆர்சி பேசுகிறது. பிராண்டுகள் மற்றும் அவற்றின் தணிக்கை நிறுவனங்கள் தொடர்ந்து புறக்கணித்து வரும் தொழிலாளர் உரிமை மீறல்களை கண்டறிய டபிள்யூஆர்சி-க்கு இது உதவுகிறது.
உலகம் எங்கும் உள்ள தொழிற்சங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பிற பொது சமூகக் குழுக்களுடன் விரிவான உறவு வலையமைப்பைக் கட்டமைத்துள்ள களப் விசாரணையாளர்களின் உலகளாவிய குழுவை டபிள்யூஆர்சி பராமரிக்கிறது. எங்கள் பணியின் ஒரு பகுதியாக, நாங்கள் ஆய்வு செய்யும் தொழிற்சாலைகளில் எங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கு வணிக பிராண்டுகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் வழங்கிய பதில்கள் பற்றிய விரிவான பொது அறிக்கைகளை டபிள்யூஆர்சி வெளியிடுகிறது. உலகெங்கிலும் உள்ள பிராண்டுகளையும் அவற்றின் விநியோகஸ்தர்களையும் முக்கிய தீர்வுகளைச் செயல்படுத்த டபிள்யூஆர்சி நிர்பந்தித்துள்ளது: தொழிலாளர்களுக்கான ஊதியம், அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துதல் மற்றும் தொலைநோக்கு பாதுகாப்பு மேம்பாடுகள்.
விநியோக தொடரில் முறையான மாற்றத்தை நோக்கி
ட்பிள்யூஆர்சி-யின் முயற்சிகள், உலகளாவிய விநியோக தொடரில் தொழிலாளர் உரிமை மீறல்களின் தன்மை மற்றும் காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியுள்ளது. தொழில்துறையின் உதவியோடு நடக்கும் கண்காணிப்புத் திட்டங்களின் குறைபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், உண்மையான சீர்திருத்தத்திற்கான பாதை பற்றிய பொது விவாதத்திற்கு உருவெடுக்க உதவுகிறது.
விநியோக தொடர்களில் ஒழுங்கான நிலைமைகளை அடைவதற்கு முறையான சீர்திருத்தம் தேவைப்படுகிறது: தன்னார்வத் தொழில்துறையை உலகளவில் நடைமுறையாகும் ஒப்பந்தங்களாக மாற்றுவது மற்றும் முறைகேடுகளைத் தூண்டும் வினியோகஸ்தர்கள் மீதான விலை அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிராண்டுகளை கட்டாயப்படுத்துவது. இந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான உத்திகளை நாங்கள் வகுக்கிறோம்.
கடந்த தசாப்தத்தில் மிகவும் புதுமையான மற்றும் பயனுள்ள தொழிலாளர் உரிமை மேம்பாடு சிலவற்றை உருவாக்கி, தொடங்கி வைத்ததில் நாங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளோம். உய்குர் கட்டாயத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டணி, -- லெசோதோவில் உள்ள நியென் ஹ்சிங் பணியாளர்கள் -- அனைவரையும் உள்ளடக்கிய பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஒப்பந்தம் உட்பட, சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தம், அல்டா கிரேசியா லிவ்விங் ஊதிய ஆடை தொழிற்சாலை மற்றும் ஹோண்டுராஸில் உள்ள ஃபுரூட் ஆப் தி லூம் வெர்க்ஃபோர்ஸ் தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்க-நிர்வாக ஒப்பந்தத்தை கூட்டாக ஒழுங்கமைத்து பேரம்பேசும் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது ஆகியவை இவற்றில் அடங்குகின்றன.