புகார் அனுப்ப

வட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஆடை மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பிரச்சனையிருப்பதாக தொழிலாளர்களின் புகார் அல்லது பிறரிடமிருந்து வருகிற தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆலைகளின் வேலை நிலைமைகளை WRC விசாரணை செய்கிறது. தொழிலாளர்களின் பணியிடத்தில் அவர்கள் வசதியாக உணர்கிற இடத்தில் அவர்களுடன் நேர்காணல், தொடர்புடைய ஆவணங்களைச் சேகரித்தல், ஆலை நிர்வாகம் மற்றும் தகவல் அறிந்தவர்களை சந்திப்பது போன்றவை விசாரணைகளில் அடங்கும். தொழிற்சாலையில் மீறல்கள் கண்டறியப்பட்டால், மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை WRC செய்யும்.

தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்கள் பொதுவாக WRC ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கும் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் மூலம் WRC க்கு வருகின்றன. இருப்பினும், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தொழிலாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் WRC க்கு புகார்களை சமர்ப்பிக்கலாம்:

  தொழிற்சாலை எந்த நாட்டில் உள்ளது

  தொழிற்சாலையின் பெயர் மற்றும் முகவரி

  தொழிலாளர் உரிமை மீறல்களை விவரிக்கவும்

  விசாரணைக்கு பயனுள்ள ஆவணங்களை இணைக்கவும்

  உங்கள் பெயர்

  உங்கள் தொலைபேசி எண்

  உங்கள் மின்னஞ்சல்

  உங்கள் பெயர் மற்றும் தொடர்பு முகவரியின் ரகசியத்தன்மையை நாங்கள் கண்டிப்பாக பராமரிப்போம் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடமிருந்து சிறப்பு அனுமதி பெறாதவரை இவை அனைத்தும் எந்த நேரத்திலும் வெளியிடப்படாது. நீங்கள் வழங்கும் தகவல்கள் புகார் விசாரணையைத் தொடர மட்டுமே பயன்படுத்தப்படும்.

  நாங்கள் பெறுகிற அனைத்து புகார்களையும் WRC முழு விசாரணையை மேற்கொள்வதில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் தீவிரம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை,  வழக்கைக் குறித்த அறிவு மற்றும் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்த உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் பார்வை, பல்கலைக்கழகங்களோடு தொடர்புடைய நிறுவனங்களுக்கும் உற்பத்தி செய்கிற ஆலைகளுக்கும் இடையே உள்ள உறவு குறிப்பிடத்தக்க வகையில் ஒரு பயனுள்ள திருத்த நடவடிக்கை திட்டத்தை உருவாக்க உதவுமா இல்லையா, விசாரணையைத் தொடர்வதை தொழிலாளர்கள் ஆதரிக்கிறார்களா போன்ற பல்வேறு காரணிகளை விசாரணையைத் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கWRC மதிப்பிடுகிறது.