இந்திய விசாரணைகள்

நாச்சி ஆடை

நாச்சி ஆடை நிறுவன உரிமையாளர் ஈஸ்ட்மேன் அப்பேரல் மற்றும் ஹெச்&எம் நிறுவனத்தோடு, அந்தத் தொழிற்சாலையில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தலை தடுக்கும் ஒப்பந்தங்களில் உள்ளூர் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய சட்டம், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள், மற்றும்/அல்லது பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல், பிற முறைகேடான சிகிச்சைகள் மற்றும் சங்கச் சுதந்திரத்தில் தலையிடுதல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை மீறும் பல நடைமுறைகளை நாச்சி தொழிற்சாலையில் டபிள்யூஆர்சி கண்டறிந்த பின்பு இந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.

 

டெக்ஸ்போர்ட் கிரியேசன்

ஆடைத் தொழில்துறையின் குறைவான ஊதியத்தால், கோவிட்-19 நெருக்கடியின்போது,பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்களுக்கு எந்தச் சேமிப்பையும் இல்லாமல் போனது. ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உள்ள பெரும்பாலான அரசுகள் வேலையில்லாத் திண்டாட்டப் பலன்களை குறைவாக வழங்குகின்றன அல்லது வழங்குவதில்லை. அதனால், வேலைக்குச் செல்லாத ஆடைத் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தின் உடனடி வறுமைக்கும் இடையே உள்ள ஒரே விஷயம், பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது சட்டப்பூர்வமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடுவதுதான்.

பொருந்தொற்று காலத்தின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஆடைத் தொழிலாளர்களுக்கு, சில அல்லது எல்லா முக்கியமான இழப்பீடுகளும் மறுக்கப்பட்டுள்ளதை தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு (டபிள்யூஆர்சி) நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. சட்டம், வணிக பிராண்டுகளின் தொழிலாளர் கடமைகள் மற்றும்  அவர்கள் தைத்த ஆடைகளின் சில்லறை விற்பனையாளர்கள் எல்லாவற்றையும் மீறி இது நிகழந்துள்ளது.

பணிநீக்கம், பின்னர் திருட்டு:ஃபேஷன் பிராண்ட்ஸ் என்ற டபிள்யூஆர்சி-யின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட 31 ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் ஒன்று டெஸ்க்போர்ட் கிரியேசன். இது கோவிட் 19 பரவியபோது ஊதியத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தது, ஏப்ரல் 2021 வரை சட்டப்பூர்வமாக கட்டாயமாக கொடுக்க வேண்டிய பணிநீக்க இழப்பீட்டை அது கொடுக்க வேண்டியிருந்தது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் டெஸ்க்போர்ட் கிரியேசன் மூடப்பட்டபோது 750 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. 2021 ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தத் தொழிலாளர்கள் இன்னும் 216,334 டாலர் சட்டப்பூர்வ இழப்பீட்டிற்காகக் காத்திருந்தனர்.

டெக்ஸ்போர்ட் கிரியேஷன் எண். 26/1, எ2, 26/1, பி2, டி.எம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கெஞ்சனஹள்ளி, ஆர்.ஆர். நகர், மைசூர் சாலை, பெங்களூரு, இந்தியா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆடை தைக்கும் நிறுவனம் ஆகும். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டபிள்யூஆர்சி-க்கு அனுப்பிய கடிதத்தில், ஒவ்வொரு தொழிலாளியின் பணிநீக்க இழப்பீட்டு கணக்கீடு அறிக்கைகள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களை சரிபார்த்ததாகவும், அவை தொழிலாளிக்கு செலுத்தப்பட்டு விட்டதாகவும் கேப் கூறியது. தொழிலாளர்கள் மற்ற பணிநீக்க இழப்பீடுகளைப் பெற்றனர், ஆனால் பிரித்துவிடப்பட்டதற்கு இழப்பீட்டை பெறவில்லை என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

 

கார்டன் சிற்றி பேஷன்ஸ்

ஆடைத் தொழில்துறையின் குறைந்த ஊதியத்தால், கோவிட்-19 நெருக்கடியின்போது,பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்களுக்கு எந்தச் சேமிப்பையும் இல்லாமல் போனது. ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உள்ள பெரும்பாலான அரசுகள் வேலையில்லாத் திண்டாட்டப் பலன்களை குறைவாக வழங்குகின்றன அல்லது வழங்குவதில்லை. அதனால், வேலைக்குச் செல்லாத ஆடைத் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தின் உடனடி வறுமைக்கும் இடையே உள்ள ஒரே விஷயம், பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது சட்டப்பூர்வமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடுவதுதான்.

பொருந்தொற்று காலத்தின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஆடைத் தொழிலாளர்களுக்கு, சில அல்லது எல்லா முக்கியமான இழப்பீடுகளும் மறுக்கப்பட்டுள்ளதை தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு (டபிள்யூஆர்சி) நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. சட்டம், வணிக பிராண்டுகளின் தொழிலாளர் கடமைகள் மற்றும் அவர்கள் தைத்த ஆடைகளின் சில்லறை விற்பனையாளர்கள் எல்லாவற்றையும் மீறி இது நிகழ்ந்துள்ளது.

பணிநீக்கம், பின்னர் திருட்டு:ஃபேஷன் பிராண்ட்ஸ் என்ற டபிள்யூஆர்சி-யின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட 31 ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் ஒன்று கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ். இது கோவிட் 19 பரவியபோது ஊதியத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தது, ஏப்ரல் 2021 வரை சட்டப்பூர்வமாக கட்டாயமாக கொடுக்க வேண்டிய பணிநீக்க இழப்பீட்டைக் கொடுக்க இது வேண்டியிருந்தது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ் மூடப்பட்டபோது 4,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. 2021 ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தத் தொழிலாளர்கள் 778,803 டாலர் சட்டப்பூர்வ இழப்பீட்டிற்காக இன்னும் காத்திருந்தனர்.

கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ், #84, தொழில்துறை புறநகர், யஷ்வந்த்பூர், பெங்களூரு,இந்தியா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆடை தைக்கும் நிறுவனமாகும். ஆடை மற்றும் ஜவுளி தொழிலாளர் சங்கம் (ஜேஎடிடபிள்யூயு) டபிள்யூஆர்சி-யிடம் இது பற்றி தகவல் அளிக்க, அந்த தொழிலாளர்கள் சி&எ மற்றும் ஜேசிபென்னி-க்கு ஆடை தைத்து வழங்குவதை உறுதி செய்தனர்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சி&எ வெளிப்படுத்திய செய்தியில் கார்டன் சிட்டி ஃபேஷன் யூனிட்கள் II, III, IV மற்றும் V அடங்கின. இறக்குமதிப் பதிவுகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கெஸ்-யின் ஏற்றுமதிகளையே காட்டுகின்றன. கார்டன் சிட்டி ஃபேஷன்ஸ் அதன் இணையதளத்தில் அதன் முக்கிய பங்குதாரர்களாக சி&எ, கெஸ், டிபன்ஹாம்ஸ், சிசில், நெக்ஸ்ட், ஃபாரெவர் 21, எஸ்பிரிட், மஃப்டி மற்றும் டன்னெஸ் ஸ்டோர்ஸ் ஆகியவற்றை கட்டின.

 

 டிரஸ் மாஸ்டர் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்

டிரெஸ் மாஸ்டர் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்., இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கேப் விநியோகஸ்தர். 2020 ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. 1,200 தொழிலாளர்களுக்கு 346,134 டாலர் சட்டப்பூர்வ பணிநீக்க இழப்பீடு வழங்காமல் அது இருந்தது. டிரஸ் மாஸ்டர் இந்திய நிறுவனமான ரேமண்ட் லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருந்தது. மூன்று பிராண்டுகளுக்கு சொந்தமானது மற்றும் ஐந்து துணை நிறுவனங்களை இது இயக்குகிறது.

தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குறைந்ததால், நிர்வாகம் தங்களை பணிவிலக ஊக்குவித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பே தொழிலாளர் குறைப்பு தொடங்கி இருந்தது. அரசு விதித்த கட்டாய பொது முடக்கம் காரணமாக, 2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொழிற்சாலை பெரும்பாலும் பல வாரங்களுக்கு மூடப்பட்டது, முகமூடிகளை தயாரிக்கும் பணியில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்தனர். மே 17-ம் தேதி தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டபோது, பாதி தொழிலாளர்களே திரும்ப அழைக்கப்பட்டனர். பின்னர், ஜூன் மாதத்தில், ஆர்டர்கள் இல்லாததால் தொழிற்சாலை மீண்டும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், தொழிற்சாலை மறுபடியும் திறக்கப்படும்போது அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகும், டிரஸ் மாஸ்டர் மூடியே உள்ளது. மேலும் அது தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சில சலுகைகளை (வருடாந்திர போனஸ் மற்றும் சம்பாதித்த விடுப்பு ஊதியம்) வழங்கியிருந்தாலும், பணிநீக்க இழப்பீடுகளை வழங்கவில்லை.

டிரஸ் மாஸ்டர் நிறுவனம் தொழிலாளர்களுக்கு எல்லா இழப்பீடுகளையும் செலுத்திவிட்டதாக கேப் தெரிவிக்கிறது. இருப்பினும், பணிநீக்க இழப்பீட்டில் ஒரு ரூபாய் கூட தாங்கள் பெறவில்லை என்று தொழிலாளர் பிரதிநிதிகள் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். டிரஸ் மாஸ்டர் நிறுவன உரிமையாளர்களால் கேப்-க்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதாக டபிள்யூஆர்சி முடிவுக்கு வந்துள்ளது.

 

அவெரி டென்னிசன்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஜிஎடிடபிள்யூயு) பிரதிநிதித்துவத்தை கோரிய நிறுவன ஊழியர்களுக்கு எதிராக அவெரி டென்னிசன் மேற்கொண்ட நடவடிக்கையை டபிள்யூஆர்சி விசாரித்தது. அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த ஆலையில் தொழிலாளர்களின் சங்க உரிமைகளை அவெரி டென்னிசன் மீறியதை டபிள்யூஆர்சி கண்டறிந்தது:

  • தொழிற்சாலை மனித வள மேலாளரால் தொழிற்சாலையில் பதவியில் உள்ள தொழிற்சங்கத்தின் தலைவருக்கு முறையற்ற முறையில் பணம் வழங்குதல் மற்றும் ஜிஎடிடபிள்யூயு-வின் பிரதிநிதித்துவம் கோரும் தொழிலாளர்களின் முயற்சியை எதிர்க்கும் வகையில் அந்த தொழிற்சங்கத்தின் தலைவர்களை ஒன்றுசேர்ப்பது;
  • ஜிஎடிடபிள்யூயு-யை ஆதரிக்கும் ஊழியர்களுக்கு எதிராக வன்முறை, குற்றவியல் வழக்கு, மற்றும் வீட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற அச்சுறுத்தல்களை உடல்ரீதியாக தாக்குவதற்கும் மற்றும் வெளியிடுவதற்கும் தற்போதைய தொழிற்சங்கத்தின் ஆதரவாளர்களை அனுமதித்தல்; மற்றும்
  • தொழிலாளர்களின் வன்முறையற்ற சங்கச் செயல்பாடுகளின் மீது மிரட்டல் விடுக்கும் கண்காணிப்பை நடத்துதல்.

இந்த விசாரண முடிவுகளை அவெரி டென்னிசன், கொலம்பியா (கல்லூரி சார் உரிமம் பெற்றது) மற்றும் இந்த தொழிற்சாலையில் இருந்து சேவை பெறுகின்ற பிற பிராண்டுகளோடு டபிள்யூஆர்சி பகிர்ந்து கொண்டது. அதன் விளைவாக, டபிள்யூஆர்சி-யை தொடர்பு கொண்ட அவெரி டென்னிசன் திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டது. அவெரி டென்னிசன், ஜிஎடிடபிள்யூயு மற்றும் தற்போதைய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழுவை அங்கீகரித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் மற்றும் பயன்களில் குறிப்பிடத்தக்க மேம்படுடன் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

ஷாகி எக்ஸ்போட்ஸ் பிரைவேட் லிமிட் .

ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகம், லிமிடெட்டின் (ஷாஹி) யூனிட் 8 தொழிற்சாலை (பெங்களூரு, இந்தியா) தொழிலாளர்களின் அடிப்படை தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக மோசமான அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் பரப்புரை மேற்கொண்டது டபிள்யூஆர்சி-யின் விசாரணையில் தெரியவந்தது. கர்நாடக ஆடைத் தொழிலாளர்கள் சங்கத்துடன் (கேஒஒஜியு) இணைந்து தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காக மனு செய்ததற்குப் பழிவாங்கும் முயற்சியாக இது நடைபெற்றது. இந்த தொழிற்சாலையானது கொலம்பியா ஸ்போர்ட்ஸ்வேர் மற்றும் பெனட்டன், எச்&எம், மற்றும் அபெர்க்ரோம்பி & ஃபிட்ச் ஆகியவற்றிற்கான பல்கலைக்கழக இலட்சினை ஆடைகளை உருவாக்குகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆடை தயாரிப்பாளரான ஷாஹி, அஹுஜா குடும்பத்திற்கு சொந்தமானது. 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆடைத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யுமாறு கர்நாடகா மாநில அரசிடம் வலியுறுத்திய இந்த நிறுவனம் வெற்றியும் பெற்றது. ஏப்ரல் பிற்பகுதியிலும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த தொழிற்சாலையில் டபிள்யூஆர்சி நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்ட ஷாஹி தொழிலாளர்கள் நேர்காணல் வழங்கினர். ஷாஹி நிறுவனம், இந்திய சட்டம், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள், பல்கலைக்கழகம் மற்றும் வணிக பிராண்டு நடத்தை விதிகளை மீறுவதை டபிள்யூஆர்சி கண்டறிந்தது. இந்த மீறல்களில் உடல் ரீதியில் தாக்குதல், கொலை மிரட்டல்கள், பாலினம், சாதி மற்றும் மதம் சார்ந்த துஷ்பிரயோகம் மற்றும் வெகுஜன பணிநீக்க அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்; மற்றும் 15 தொழிலாளர் ஆர்வலர்களை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றியது.

ஷாஹி, கொலம்பியா ஸ்போர்ட்ஸ்வேர் மற்றும் பிற பிராண்டுகளுடன் விசாரண முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை டபிள்யூஆர்சி பகிர்ந்து கொண்டது. மேலும், பணி நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் பணியில் அமர்த்துதல், வன்முறைச் செயல்களில் நேரடியாக ஈடுபட்ட மேலாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் தொழிற்சங்கத்தை உடனடியாக அங்கீகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தது. யூனிட் 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஷாஹி ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்க சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அது உடன்படவில்லை. ஷாஹி அவசியமான திருத்தம் செய்யத் தவறியதன் காரணமாக, தங்களின் விசாரணையை டபிள்யூஆர்சி பகிரங்கப்படுத்தியது, ஷாஹி மற்றும் பிராண்டுகள் மீது அழுத்தம் கொடுக்க கணிசமான ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கல்லூரி உரிமம் பெற்ற கொலம்பியாவிடம், தாங்களின் பரிந்துரைகளை வலியுறுத்த அழுத்தம் கொடுக்கவும் செய்தது.

டபிள்யூஆர்சி-யின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ஷாஹி ஜூன் 25-ம்தேதி அன்று தொழிலாளர் சங்கத்தை சந்தித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஒயு) கையெழுத்திட்டது. அதன் முக்கிய அம்சங்கள் ஜூன் இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. 15 தொழிலாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி, ஷாஹி யூனிட் 8 தொழிற்சாலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டும் இருந்தனர்.  அவர்கள் எந்தவித நிபந்தனைகளோ, துன்புறுத்தலோ இன்றி தொழிற்சாலையில் பணிக்குத் திரும்பியதோடு, அவர்களது ஊதியத்தையும் திரும்பப் பெற்றனர். தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் திரும்பவும் வந்ததை டபிள்யூஆர்சி-யின் பிரதிநிதிகள் மற்றும் வாங்குகின்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கண்காணித்தனர். தொழிற்சங்கத்தையும் அங்கீகரித்த ஷாஹி, வழக்கமான பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புக்கொண்டது. மேலும், வன்முறைக்கு காரணமான பெரும்பாலான மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை பணிநீக்கமும் செய்தது.

 

கோகல்தாஸ் இந்தியா

இந்த சோக சம்பவத்தின்போது, தொழிற்சாலை ஊழியர்களின் தகுதிகள், பணியிட குழந்தை பராமரிப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிக்கான உபகரணங்கள் தொடர்பாக பல மாநில விதிமுறைகளை மீறியது டபிள்யூஆர்சி விசாரணையில் தெரியவந்தது, மேலும், தொழிற்சாலை இந்த தேவைகளை பூர்த்தி செய்திருந்தால், குழந்தையின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்திலும், குழந்தையின் தாய் காரணமாக பெருமளவு இழப்பு மற்றும் தொழிற்சாலையின் ஏராளமான நிதி ஆதாரங்களை (கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் பல பில்லியன் டாலர் தனியார் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமத்திற்கு பெரும்பான்மை சொந்தமானது), கவனத்தில் கொண்டு தொழிலாளிக்கும், அவரது குடும்பத்திற்கும் கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் கணிசமான கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டபிள்யூஆர்சி கடுமையாக வலியுறுத்தியது.

எனவே, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்பான ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சங்கம் (ஜிஎடிடபிள்யூயு) ஆகியவற்றுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இறந்த குழந்தையின் தாய்க்கு கூடுதல் தொகையை வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஏற்பட்ட பேரிழப்பைக் கருத்தில் கொண்டு 10,500 டாலர் (அல்லது கிட்டத்தட்ட ஒன்பது வருட ஊதியம்) கூடுதல் இழப்பீட்டை தொழிலாளர் செப்டம்பர் 14-ம் தேதி பெற்றுக்கொண்டார்.

 

ஷாகி எக்ஸ்போட்ஸ்

மார்ச் 2009 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்குப் பிறகு சுமார் ஓராண்டாக, பெங்களூரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக கொடுக்க வேண்டிய ஊதியத்தை வழங்கத் தவறிவிட்டன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வருமான உரிமை பறிக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50,000 தொழிலாளர்களுடன், பெங்களூருவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒன்றாக ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் இருந்தது. உரிமை மீறல்களின் ஆதாரங்களை ஷாஹியிடம் டபிள்யூஆர்சி சமர்ப்பித்தபோது, குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறியதை நிர்வாகம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. ஆனால், இது பெங்களூரில் உள்ள தொழில்துறையில் பொதுவான நடைமுறை என்றும் கூறியது. இந்த அதிகரிப்பு தவறான ஆலோசனை என்ற தொழில்துறை நம்பிக்கையின் அடிப்படையில், நிர்வாகம் தாங்கள் செய்ததை நியாயப்படுத்தியது. குறைந்தபட்ச ஊதிய வரையறையை குறைக்க அரசாங்கத்தை வலியுறுத்தவும் செய்தது.

இந்த பரவலான ஊதிய மீறல்களை டபிள்யூஆர்சி வெளிக்கொண்டு வந்ததால், பல்கலைக்கழக ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல முக்கிய ஆடை பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தயாரிப்பு பணிகள் செய்யும் தொழிலாளர்கள் உட்பட, 1,10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைத்தது. நகரம் முழுவதும் உள்ள ஏற்றுமதி ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் இப்போது வழங்கப்படுவதை டபிள்யூஆர்சி உறுதிப்படுத்தியுள்ளது.