எம்மை பற்றி

தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு (டபிள்யூஆர்சி)தொழிலாளர் உரிமைகளை கண்காணிக்கும் ஒரு சுயாதீன அமைப்பாகும். உலகிலுள்ள தொழிற்சாலைகளின் பணி நிலைமைகளை நாங்கள் ஆராய்கிறோம். வசதி குறைந்த பணியிடங்களில், குறைந்த ஊதியத்தில், அதிக நேர பணி நிலைமைகளை ஆவணப்படுத்தி, போராடுவதும்; உலக வணிக பிராண்டுகள் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்களை மேற்கொண்டு வரும் சில்லறை விற்பனையாளர்களின்  செயல்பாடுகளை இனம்கண்டு, வெளிப்படுத்துவதும்; ஆடை மற்றும் பிற பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் எங்கள் நோக்கமாகும்.

டபிள்யூஆர்சி தனிப்பட்ட, தொழிலாளர்களை மையமாக கொண்ட விசாரணைகளை மேற்கொள்கிறது; முக்கிய வணிக பிராண்டு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி அறிக்கைகளை பொதுவில் வெளிப்படுத்துகிறது; இத்தகைய தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தங்களுக்கு எதிரான உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பணியிட உரிமைகளை பாதுகாக்கவும் இது உதவுகிறது. பல்வேறு நாடுகளில் டபிள்யூஆர்சி விசாரணயாளர்களை இது கொண்டுள்ளது. தென்கிழக்காசியா, கிழக்காசியா, தெற்காசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள நூற்றுக்காணக்கான பொது சமூக அமைப்புகளோடும் இது பணியாற்றுகிறது.

உலகிலுள்ள தயாரிப்பு துறை தொழிலாளர்களுக்கு, திருப்பதியான பணிச்சூழல்கள் மற்றும் ஊதியங்களுக்கு முன்னணி பிராண்டின் உலக அளவில் விநியோகச் தொடர்களில் முறையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் வணிக பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தானாக முன்வந்து மேற்கொள்ளாதவைகள். தொழிற்சாலை சார்ந்த எமது பணிகளுக்கு அப்பாற்பட்டு, தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களை இணைக்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்த டபிள்யூஆர்சி முயல்கிறது.

உலக அளவில் பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பொருளுள்ள பொது தரநிலை அமலாக்கம் மிக குறைவாக இருக்கிறது. மேலும், தன்னார்வ "கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு" திட்டங்களும், தனியார் ஒப்பந்த செயல்பாடுகளும் தொடர்ந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன. வங்கதேசத்தில் தீ மற்றும் கட்டிட பாதுகாப்பு ஒப்பந்தம் போன்றவை டபிள்யூஆர்சி உருவாக்கி செயல்படுத்த உதவியதை குறிப்பிடலாம். இவை தொழிலாளர்களுக்கு நிலையான பலன்களை உருவாக்கி கொடுப்பதற்கு சிறந்த வழிமுறையாகும்.

இரண்டாயிரம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் உரிமை நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களால் டபிள்யூஆர்சி நிறுவப்பட்டது. பல்கலைக் கழகங்கள், பல்கலைக்கழக சின்னங்களைக் கொண்ட ஆடைகள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக அவை ஏற்றுக்கொண்ட தொழிலாளர் தரநிலைகளை அமல்படுத்த இது உதவுகிறது. அமெரிக்கா, கனடாவில் டபிள்யூஆர்சி பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கொண்டுள்ளது. நகராட்சிகள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் உள்பட, அரசு நிறுவனங்களோடும் பணியாற்றும் டபிள்யூஆர்சி, மனித உரிமை தரநிலைகளை அமல்படுத்த முயற்சிக்கிறது.