உய்குர் கட்டாய உழைப்புக்கு முடிவு கட்டுதல்

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும் உய்குர், பிற துருக்கிய மற்றும் முஸ்லிம்-பெரும்பான்மை மக்கள் மீதான சீன அரசின் உரிமை மீறல்கள், முன்னணி ஆடை வணிக பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கடுமையான மனித உரிமை நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. சீன அரசால் நடத்தப்படும்  கட்டாய பணிச்சூழல் சின்சியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் (உய்குர் பிராந்தியம்)பரவலாகியுள்ளது. வெகுஜன தன்னிச்சை தடுப்புக்காவல், கட்டாய அரசியல் போதனை, கட்டாயமாக குடும்பத்தைப் பிரித்தல் மற்றும் பரவலான கண்காணிப்பு உள்பட பிற மோசமான மனித உரிமை மீறல்களுடன் அரசின் தலையீடு உள்ளது.

சீன அரசின் கட்டாய உழைப்பு திட்டத்தில் ஆடை மற்றும் ஜவுளித்துறை கவனம் பெறுகிறது. உலகளாவிய ஆடைத் தொழில்துறைக்கு கட்டாய உழைப்பின் மிகப்பெரிய ஆபத்து ஆடை தைக்கும் மட்டத்தில் இல்லை, மாறாக, விநியோக தொடரின் கீழ், பருத்தி மற்றும் நூல் உற்பத்தியில் உள்ளது. உலகளாவிய பருத்தி உற்பத்தியில் 20 சதவீதத்திற்கு ஆதாரமாக உய்குர் பிராந்தியம் விளங்குகிறது. இது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமாகும்:

உலகளாவிய ஆடை சந்தையில் ஏறக்குறைய ஐந்து பருத்தி ஆடைகளில் ஒன்று, உய்குர் பிராந்திய பொருட்களை கொண்டு செய்யப்பட்டிருப்பதோடு, கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் அதிக ஆபத்தையும் கொண்டுள்ளது.

உய்குர் கட்டாய உழைப்பு நெருக்கடிக்கு ஆடை பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நான்கு வழிகள் பங்காற்றலாம்:

  1. உய்குர் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு தயாரிப்பு நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் வணிக உறவுகள் மூலம் ஆடை அல்லது மற்ற பருத்தி சார் பொருட்களை தயாரித்தல்;
  2. சீன அரசின் மானியங்கள் மற்றும்/அல்லது அரசாங்கம் வழங்கும் தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு உய்குர் பிராந்தியத்தில் அமைந்துள்ள துணை நிறுவனங்கள் அல்லது அதே செயல்பாடுகளைக் கொண்ட அந்த பிராந்தியத்திற்கு வெளியே உள்ள நிறுவனங்களோடு வணிக உறவை பேணுதல்;
  3. உய்குர் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ஒரு பணியிடத்தில், அரசால் அனுப்பப்பட்ட உய்குர் பிராந்தியத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட வியோகஸ்தர்களிடம் வணிக உறவுகள் மூலம்;
  4. சீனா மற்றும் உலகளவில் உள்ள விநியோகஸ்தர்களுடன் மேற்கொள்ளும் வணிக உறவுகள் மூலம் உய்குர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள். ஆனால் துணி, நூல் அல்லது பருத்திக்கு மட்டும் விதிவிலக்கு.

இந்த பிராந்தியத்தில் நிலவும் அடக்குமுறை மற்றும் கண்காணிப்பின் தீவிரம் காரணமாக, வணிக பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விநியோக தொடர்கள், கட்டாய உழைப்பினால் வராமல் இருப்பதை உறுதிசெய்ய பொதுவாக பயன்படுத்தும் வழிமுறைகள் இந்த சூழலில் நடைமுறை சாத்தியமற்றது. எடுத்துக்காட்டாக, தொழிலாளர் உரிமை தணிக்கையை கூறலாம். பழிவாங்குகின்ற அல்லது பழிவாங்கப்படும் பயம் இல்லாமல் ஒரு தொழிலாளி சுயாதீன புலனாய்வாளரிடம் நேர்மையாக பேச முடியாததே அற்கு காரணம்.

எனவே, ஆடை பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உய்குர் கட்டாய உழைப்புக்கு உடந்தையாக இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, பருத்தி முதல் உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் வரை விநியோக தொடரின் அனைத்து மட்டங்களிலும் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவது மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான வணிக உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை இந்த கட்டாய தொழிலாளர் நெருக்கடியில் தொடர்புப்படுத்தப்படுகின்றன.